பதிவு செய்த நாள்
24
நவ
2017
01:11
பெருந்துறை: பெருந்துறையில், செல்லாண்டியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. பெருந்துறை, குன்னத்தூர் சாலை, செல்லாண்டியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 7ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பொங்கல் விழா நேற்று நடந்தது. விரதம் மேற்கொண்ட பெண்கள், வெள்ளை உடை அணிந்து ’தென்டலிடும்’ நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், திருக்காவடி தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. செல்லாண்டியம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை, திருவீதி உலா நடக்கிறது.