பதிவு செய்த நாள்
25
நவ
2017
01:11
சங்ககிரி: சங்ககிரி, ஆர்.எஸ்.சின்னாக்கவுண்டனூர், ஓங்காளியம்மன் கோவிலில், மாரியம்மன், மஹா கணபதி சுவாமிகளுக்கு, வரும், 29ல், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, நாளை இரவு, கிராம சாந்தி, விநாயகர் பூஜை, யாகவேள்வி நடைபெறும். 27ல், காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, முதலாம் கால யாக பூஜை வேள்வி நடைபெறும். 28ல், இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலச பிரதிஷ்டை, மூன்றாம் கால யாக பூஜை, நாடி சந்தனம் நடக்கும். 29 காலை, 6:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.