புல்மேடு பாதையில் வசதிகள் : தேவசம்போர்டு உறுப்பினர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2017 10:11
சபரிமலை: சபரிமலைக்கு வரும் முக்கிய பாதையான புல்மேடு பாதையில் தேவசம்போர்டு உறுப்பினர் ராகவன், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். குமுளியில் இருந்து சத்திரம், புல்மேடு, பாண்டிதாவளம் வழியாக சன்னிதானம் வரமுடியும். தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவு பக்தர்கள் இந்த வழியாக வருகின்றனர். காடு பாதையாக இருக்கும் இவ்வழியாக மகரவிளக்கு காலத்தில் அதிகளவில் பக்தர்கள் வருவர். இந்த பாதையில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் பற்றி தேவசம்போர்டு உறுப்பினர் ராகவன், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புல்மேடு பாதையில் தற்போது அழுதைகுழியில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அதிகமாகும் போது இங்கு கஞ்சி, உப்புமா போன்ற உணவுகள் வழங்கப்படும். மருத்துவசதியும் இங்கு செய்ய வேண்டும். இதற்காக வனம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். புல்மேடு பாதையில் பயணம் பக்தர்களுக்கு புதுஅனுபவத்தை தரும். இது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.