பதிவு செய்த நாள்
27
நவ
2017
12:11
ஈரோடு: ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா கோவில்களில், அர்ச்சனைக்கு, ஐந்து ரூபாய், பாலாபிஷேகத்துக்கு, 10 ரூபாய், வடை மாலைக்கு, 50 ரூபாய், நிச்சயதார்த்தத்துக்கு, 500 ரூபாய், திருமண விண்ணப்பம், 100 ரூபாய், சிறப்பு அபிஷேகம், 50, திருமண கட்டணம், 1,000 ரூபாய், சிறப்பு தரிசனத்துக்கு, 30 ரூபாய் என, சமீபத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில், பலத்த அதிருப்தி எழுந்துள்ளது. கட்டண உயர்வால், தட்டில் காசு விழுவதில்லை என, கோவில் அர்ச்சகர்களும் புலம்புகின்றனர். கட்டண உயர்வை ரத்து செய்ய, இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை வைத்து, மனுவும் கொடுத்துள்ளனர். கோவில் பணியாளர்கள் சிலர் கூறியபோது, கோவிலுக்கு உண்டியல் வருமானத்தை தவிர, வேறு வருவாய் இல்லை. மின் கட்டணம், பராமரிப்பு என பல்வேறு செலவு உள்ளதால், அறநிலையத்துறை ஆணையம் புதிய கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது என்றனர்.