தேவதானப்பட்டி, குள்ளப்புரம் மருதகாளியம்மன் கோயில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஏராளமானோர் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்கள் பாலிதீன் பை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தியபின் அப்படியே போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால் ம ாசு ஏற்படுகிறது. இந்நிலையில் தாமரைக்குளம் விழுதுகள் இளைஞர் மன்ற செயலாளர் சங்கிலித்துறை, நிர்வாகி முத்துபாண்டி ஆகியோர் தலைமை யில், கோயிலை மாசுபடுத்தும் வகையில் சிதறிக்கிடந்த பாலிதீன் கழிவுப்பொருட்களை அகற்றினர்.