பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, பட்டணத்திலுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், முதலாம் ஆண்டு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில், சபரிமலைக்கு மாலை அணிந்த, 45 பேர் பங்கேற்ற சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நல்லட்டிபாளையம், பட்டணம் பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.