பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் ‘தத்வமஸி’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது ‘நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்’ என்பது இதன் பொருள். “ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை. காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான், இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ, அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம் நல்லதைப் பேசு, நல்லதை செய், நன்மையே நாடு‘ என்பது இந்தச்சொல்லுக்குள் அடங்கியுள்ள தத்துவம்.