பதிவு செய்த நாள்
30
நவ
2017
12:11
கூவம்:கூவம், வெங்கடேச பெருமாள் கோவிலில், இன்று, மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்து உள்ளது கூவம் கிராமம். இந்த கிராமத்தில், கருணீகர் தெருவில் அமைந்துள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில், இன்று, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.நேற்று மாலை, 4:00 மணிக்கு, பூர்வாங்கமும், கும்ப அலங்காரமும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.இன்று காலை, 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், கலச புறப்பாடும் நடைபெறும். காலை, 9:30 மணிக்கு மேல், காலை 11:00 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடைபெறும். பின், தொடர்ந்து, பகல் 12:00 மணிக்கு, மகா அபிஷேகமும், தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு வெங்கடேச பெருமாள் மலர் அலங்காரத்தில் வீதிஉலாவும் நடைபெறும்.