பதிவு செய்த நாள்
30
நவ
2017
12:11
திருவாலங்காடு: விநாயகர் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவில் உள்ள பெரிய தெருவில், விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம், கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 56 கலசங்கள் வைத்து, மூன்று கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும், காலை, 8:30 மணிக்கு, கலச ஊர்வலமும் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, கோவில் கோபுரத்தின் மீது கலசநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு வண்ணமலர் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில், திருவாலங்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.