பதிவு செய்த நாள்
30
நவ
2017
01:11
வாலாஜாபாத்: கோவிந்தவாடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேகம் நேற்று, கோலாகலமாக நடந்தது. கடந்த, 27ம் தேதி கணபதி ஹோமத்துடன், கலச பூஜை துவங்கியது. நேற்று காலை, 6:30 மணிக்கு, நான்காம் கட்ட பூஜையும், 9:00 மணிக்கு கலச புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து, 9:30 மணிக்கு, மேல தாளங்கள் முழங்க, அதிர்வேட்டு ஒலிக்க, கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்தனர். டூ உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூரில் பழமையான நுாக்காளம்மன் கோவில் உள்ளது. சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டதால், அப்பகுதிவாசிகளால், கோவிலில் புனரமைப்பு பணி நடந்தது. பணி நிறைவையடுத்து, நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளை தொடர்ந்து, கலசம் புறப்பாடு முடிந்து, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.