எரியோடு, எரியோடு சித்துாரில் வீருதம்மாள், ஏரசிக்கம்மாள், வீருசிக்குபாட்டையா மாலை கோயில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது வருடாபிஷேக விழா நடந்தது. 16 வகை அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடந்தன. விழா ஏற்பாட்டினை கோயில் தலைவர் துரைச்சாமி, செயலாளர் ராம கிருஷ்ணன், பொருளாளர் பெருமாள்சாமி மற்றும் ஒக்கலிகர் ஆவுனவோர் குல தாயாதிகள் செய்திருந்தனர். சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.