பதிவு செய்த நாள்
30
நவ
2017
01:11
திருவண்ணாமலை: தீபத்திருவிழாவை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, திருவண்ணாமலைக்கு, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வண்டி எண், 06025 ரயில், டிச., 2 காலை, 10:00 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலைத்தில் இருந்து புறப்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோழிங்கநல்லூர், வாலாஜா ரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம், மற்றும் துரிஞ்சாபுரம் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக, திருவண்ணாமலைக்கு அன்று மாலை, 3:30 மணிக்கு வந்தடையும். அதேபோல், வண்டி எண், 06026 ரயில், திருவண்ணாமலையில் இருந்து டிச., 2 இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டு, வழியில் உள்ள மேற்கண்ட ரயில் நிலையங்களில் நின்று, டிச., 3 அதிகாலை, 3:40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.