கொடுமுடி: கரட்டாம்பாளையம், ஐயப்பசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கொடுமுடி வட்டாரம், வெங்கம்பூர் கிராமம், கரட்டாம்பாளையத்தில் ஐயப்பசுவாமி கோவில் உள்ளது. திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஐயப்பசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நேற்று காலை, 6:30 மணிக்கு திருப்பணிக்குழு கமிட்டி தலைவர் கணேசன் தலைமையில், கணபதி உபாசகர் ஜெயகுமார் சர்மா, சர்வ சாதகத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக விநாயகர் வழிபாடு, தீபாராதனை, நாடி சந்தானம், மற்றும் பல்வேறு ?ஹாமங்கள் நடந்தன.