பதிவு செய்த நாள்
02
டிச
2017
12:12
நாமகிரிப்பேட்டை: பேளுகுறிச்சி, பழனியாண்டவர் கோவிலில், இன்று கார்த்திகை தீப விழா நடக்கிறது. சேந்தமங்கலம் அடுத்த, பேளுக்குறிச்சியில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க பழனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில், கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கும்பாபி?ஷகம் செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தை ஒட்டி, இன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடக்கவுள்ளது.
* ராசிபுரம், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கார்த்திகை தீப விழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, காலை, 7:30 அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை, 5:30 மணிக்கு தீபம் ஏற்றுதல் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு கூம்பு தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியில், அம்மனுக்கு, 1,008 விளக்கு தீபம் ஏற்றுகின்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.