திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள ஐயப்பன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் ராஜாங்குளம் தென்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில், கார்த்தியை மாதத்தை முன்னிட்டு, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.