தந்தை, மகன்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. முருகனை வளர்த்த ஆறு பெண்களை சிவபெருமான் நட்சத்திரமாக்கி, கார்த்திகை என பெயர் சூட்டினார். எனவே முருகனுக்குரிய விரதங்களில் கார்த்திகை பிரதான இடம் பிடித்துள்ளது. அவருக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் இருக்கிறது. முருகனின் மலைக் கோயில்களில் தீபமும், மற்ற கோயில்களில் சொக்கப்பனையும் ஏற்றப்படுகிறது. விநாயகர் கோயில்களிலும் சொக்கப்பனை ஏற்றப்படும். இதே நாளில் சிவன் கோயில்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. தந்தைக்கும், மகனுக்கும் ஒரே நாளில் விழா வருகிறது. பஞ்ச பருவ விழாக்கள் திருவண் ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திர சோழன் காலத்தில் இருந்து கொண்டாடப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தை மாதம் திருவூடல் விழா நடந்துள்ளது. சித்திரையில் 10 நாள், ஆவணி மூலத் திருவிழா நடக்கின்றன. இவ்விழாக்களை பஞ்ச பருவ விழாக்கள் என்பர்.