திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதால், புயல் ஏற்பட்டாலும் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. புயல் போல துன்பங்கள் வந்தாலும், தீபதரிசனம் செய்தால் அது நீங்கி விடும் என்ற தத்துவத்தையும் இது உணர்த்துகிறது.