கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2017 02:12
கமுதி : கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேக விழா கமுதி சிவபுராணக்குழு நிர்வாகிகள் ரேணுகா உமாமகேஸ்வரி விஜயலெட்சுமி தலைமையில் நடந்தது. கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் 3 ஆம் நாளை முன்னிட்டு 1008 சங்குகளால் எம்பெருமான் சிவனின் லிங்கத்தின் வடிவம் உருவாக்கப்பட்டு சந்தனம் குங்குமம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தனை தொடர்ந்து வேள்வி பூஜையும் நடத்தப்பட்டது. சோமவார 3 ஆம் நாளை முன்னிட்டு சிவனுக்கு பால் சந்தனம் பன்னீர் விபூதி ளநீர் உட்பட வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.