திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஸ்ரீஞானானந்த நிகேதனில் திருவாசக முற்றோதல் ஞானப்பெருவேள்வி, வரும் 10ம் தேதி நடக்கிறது. திருக்கோவிலுார் ஸ்ரீஞானானந்த நிகேதனில் வரும் 10ம் தேதி, காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திருவாசக முற்றோதல் ஞானப்பெருவேள்வி நடக்கிறது. ஞானானந்த நிகேதன் நிர்வாகி நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்குகிறார். சதாசிவகிரி சுவாமிகள், சதாநந்த சரஸ்வதி சுவாமிகள், பிரபவானந்த சரஸ்வதி சுவாமிகள், ஆத்மதத்வானந்த சரஸ்வதி சுவாமிகள், அம்ருதேச்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகிக்கின்றனர். திருச்சி அய்யப்பநகர் சேக்கிழார் மன்றம், திருவாதவூரார் திருவாசக முற்றோதல் குழு, மணப்பாறை திருவாசக அன்பர் குழு உள்ளிட்ட பல அமைப்புகள் கலந்து கொள்கின்றன.