பதிவு செய்த நாள்
09
டிச
2017
12:12
ஆர்.கே.பேட்டை:ஈச்சம்பாடி விஜயவல்லி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவிலில், தனுர் மாத உற்சவம், 16ம் தேதி துவங்குகிறது. அடுத்த நாள், அனுமன் ஜெயந்தியும், ஜன., 13ல் ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. பள்ளிப்பட்டு அடுத்த, ஈச்சம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது, விஜயவல்லி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில். இந்த கோவில், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நித்ய பூஜைகள் நடந்து வருகின்றன. மார்கழியில், மகா உற்சவம் நடத்தப்பட உள்ளது. 16ம் தேதி, துவங்கும் மார்கழி முதல் நாளில் உற்சவம் துவங்குகிறது. அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை அனுமன் ஜெயந்தியை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன.காலை, 9:00 மணிக்கு, திருமஞ்சனமும், அதை தொடர்ந்து, வடைமாலை சாத்துபடியும் நடக்கிறது. வரும், 2018 ஜன., 13 வரை நடக்கும் தனுர் மாத நித்ய பூஜையில், டிச., 29ல் வைகுண்ட ஏகாதசி, ஜன., 11ல் கூடாரவல்லி வைபவங்களை தொடர்ந்து கடைசி நாளான, ஜன., 13ல், ஆண்டாள் திருக் கல்யாணம் நடைபெறும். ஜன., 14ல், பொங்கல் பண்டிகைஅன்றும் சிறப்பு தரிசனம் உண்டு.