Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: மழை விட்டாலும் தூவானம் விடலையே! விருச்சிகம்: மழை விட்டாலும் தூவானம் ... மகரம்: வந்துட்டுதய்யா 7 1/2  வந்துட்டுதய்யா மகரம்: வந்துட்டுதய்யா 7 1/2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனுசு: வாழ்க்கை என்னும் ஓடம் வழங்கப் போகுது பாடம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2017
15:14

தன்னலம் கருதாமல் பிறருக்கு உதவும் தனுசு ராசி அன்பர்களே!

கடந்த காலத்தில் சனி பகவானால்  எண்ணற்றஇடர்பாடுகளை சந்தித்திருப்பீர்கள். குறிப்பாக பணவிரயம், வீண்அலைச்சல், முயற்சியில் தடை, மன உளைச்சல் போன்ற வை ஏற்பட்டிருக்கலாம். இப்போது சனிபகவான் 12-ம் இடத்தில் இருந்து  உங்கள் ராசிக்கு வருகிறார். இது ஏழரை சனியின் உச்சக்கட்டம் என்பதால், வாழ்க்கை என்னும் ஓடம் இன்னும் பல அனுபவ பாடத்தை அளிக்க உள்ளது.  சனி உங்கள் ராசியில் இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்படலாம். உறவினர் வகையில் வீண்மனக் கசப்பு வரலாம்.

வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகலாம். அதைக் கண்டு அஞ்ச வேண்டாம்.  சனிபகவான் 3,7,10- ஆகிய மூன்று ராசிகளை பார்ப்பார். அந்த வகையில் அவரது  3-ம்
இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் செயலில் வெற்றி, பொருளாதார வளம், குடும் பத்தில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சி குறைவின்றி தருவார். குரு தற்போது 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். அவரின்7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக உள்ளது.  அவர் 2018 பிப்.14-ல் 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

அப்போது நன்மை தர இயலாது. குரு 12ம் இடத்தில் இருக்கும் போது பணவிரயம் உண்டாகும். எதிரியால் தொல்லை உருவாகலாம்.   அவர் 2018 ஏப்.9- முதல் செப்.3- வரை வக்ரம்   அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது நன்மை வரத் தொடங்கும்.  தற்போது ராகு 8-ம் இடமான கடகத்தில் இருக்கிறார். உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். முயற்சியில்  தடை ஏற்படுத்தலாம். கேது தற்போது உங்கள் ராசிக்கு  2-ம் இடமான மகரத்தில் இருப்பதும் சிறப்பல்ல.  அரசின் வகையில் பிரச்னையை சந்திக்க நேரிடும். வீடு, வாகன வகையில் திருட்டு போக வாய்ப்புண்டு. சனியால் ஏற்படும் பிரச்னையை  குருபகவானின் சுப பார்வை நிவர்த்தி செய்யும்.   

2018 ஜனவரி – 2019 பிப்ரவரி குருபகவான் ராசிக்கு 11ம் இடத்தில் இருப்பதால் தடை குறுக்கிட்டாலும், முறியடித்து வெற்றி காண்பீர்கள். வாகன பயணம் மூலம் இனிய அனுபவம் கிடைக்கும். சிலருக்கு வசதியான வீட்டுக்கு குடிபுகும் சூழ்நிலை உண்டாகும்.  2018 பிப். 14க்கு பிறகு வீண் அலைச்சல் ஏற்படும்.  கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.  உறவினர் வகையில் வாக்குவாதம் ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில் ரீதியான பயணம் ஆதாயம் அளிக்கும்.  அச்சகம், பத்திரிகை, பப்ளிகேஷன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில்கள் நல்ல வளர்ச்சி அடையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.  பணியாளர்கள் சீரான முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.  2018 பிப். 14க்கு பிறகு வேலைப்பளு இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். குரு பகவான் 2018 ஏப்ரல் 9- முதல் முதல் செப்.3- வரை வக்ரம் அடைந்து, துலாம் ராசிக்கு மாறுவதால் விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பர்.  2018 பிப்.14க்கு பிறகு, அக்கறையுடன் படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். குருபகவானின் வக்ரகாலத்தில் ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.  விவசாயிகள் நெல், கோதுமை, கொண்டைக்கடலை, கேழ்வரகு போன்ற தானியம் மூலம்  சிறப்பான மகசூல் கிடைக்கப் பெறுவர்.  புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தில் மதிப்புடன் திகழ்வர்.   வேலைக்கு செல்லும் பெண்கள் முன்னேற்ற பலன் பெறுவர்.  குரு பகவான் 2018 ஏப். 9-  முதல் செப். 3- வரை வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத் தேவை நிறைவேறும் விதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். உடல்நலனில் அக்கறை தேவை.  

2019 மார்ச் – 2020 மார்ச் குரு உங்கள் ராசிக்கு வருவதால் நன்மை பெற முடியாது.  முக்கிய கிரகங்கள்  சாதகமாக இல்லாத காலக்கட்டம் என்பதால்,  செயல் நிறைவேறுவதில் தடைகள் குறுக்கிடும்.  பண வரவுக்கு தகுந்தாற் போல் திடீர் செலவும் அதிகரிக்கும்.  யாரிடமும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சுபநிகழ்ச்சி நடத்துவதில் தாமதம் ஏற்படலாம். ஆனால் குருபகவானின் பார்வை பலத்தால் எதையும் சமாளித்து முன்னேறும் ஆற்றல் உண்டாகும்.  

இப்போது ராகு 7-ம் இடத்திற்கு மாறியுள்ளார். அவப்பெயரைச் சந்திக்க நேரலாம். சிலர் வேண்டாத நண்பர்களுடன் சேரும் சூழல் உருவாகும். கேது இப்போது உங்கள் ராசிக்கு வருவதால் செயலில் தடைஏற்படுத்தலாம்.

ராகுவால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டாலும், அதை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். அதே நேரம் உறவினர் வகையில் இருந்த பிரச்னை இனி இருக்காது.  
2019 மே 19- முதல் அக். 27- வரை  வக்ரம் அடையும் குரு,  விருச்சிக ராசிக்கு மாறுவதால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவதோ, அதிக முதலீடு செய்வதோ வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்துவது சிறப்பு. எதிரி தொல்லை இருந்தாலும்
சாதுர்யமாக எதிர்கொள்வீர்கள். அரசுவகையில் சோதனைக்கு ஆளாகலாம்.  

பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும்.  மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.  சிலருக்கு திடீர் இட, பணி மாற்றம் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஆனால் அதற்காக சற்று சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.
அரசியல்வாதிகள், சமூகநலசேவகர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.  விவசாயிகள் மானாவாரி பயிர்களின் மூலம் வருமானம் காணலாம். வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.  
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். குருபகவானின் சுப பார்வையால் தடைபட்ட சுபநிகழ்ச்சியை நடத்தி வைப்பார். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.  கேதுவால் உடல் உபாதை ஏற்பட்டாலும் பாதிக்காது.

2020 ஏப்ரல் – டிசம்பர்  குடும்பத்திற்கு தேவையான பண வசதி கிடைக்கும். நல்லவர், சான்றோர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான வருமானம் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.   

கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு பெற்று மகிழ்வர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பில் ஈடுபடுவர். விடாமுயற்சியால் போட்டியில் வெற்றி பெறலாம். விவசாயிகளுக்கு
புதிய சொத்து வாங்கும் யோகமுண்டு. வழக்கு விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.  பணிபுரியும் பெண்கள் குருபகவானின் வக்ரகாலத்தில் பணிச் சுமையை சந்திப்பர்.

பரிகாரப்பாடல்

வேயுறு தோளிபங்கன் விடம் கண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல
நல்ல அடியார் அவர்க்கு மிகவே

பரிகாரம்
● சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை
● ஞாயிறன்று ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு
● பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு நெய் தீபம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
 மதுரை : மதுரை அயிலாங்குடி ஏ.பி. டவுன் ஷிப் லட்சுமி வராகர் கோயிலில் 9வது ஆண்டு பிரதிஷ்டா தின விழா இன்று ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் ... மேலும்
 
temple
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழாவின் பத்தாம் நாளில் முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா முக்கிய நிகழ்வாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.