பதிவு செய்த நாள்
11
டிச
2017
02:12
கொடுமுடி: பைரவாஷ்டமியை ஒட்டி, கொடுமுடி, சென்னிமலை கோவில்களில் விழா நடந்தது. கார்த்திகை மாத கால பைரவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கால பைரவர் சன்னதியில், நேற்று ருத்ராஷ்டமி விழா நடந்தது. இதையொட்டி கால பைரவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பலவிதமான மூலிகை பொருட்களுடனான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 108 கலச பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
* சென்னிமலை அருகே, பிடாரியூர் திருமுக மலர்ந்தநாதர் கோவிலில், பைரவாஷ்டமி விழா நடந்தது. யாக சாலை வேள்வியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பைரவருக்கு பல்வேறு அபிஷேகங்கள், ஆராதனை நடந்தது. சென்னிமலை கைலாசநாதர் கோவில், சென்னிமலை முருகன் கோவில், முருங்கத்தொழுவு பிரலிங்கேஸ்வரர் கோவிலிலும் பைரவாஷ்டமி பூஜை விமர்சையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.