பதிவு செய்த நாள்
11
டிச
2017
02:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், இன்று மாலை, லட்சதீப திருவிழா நடைபெறுகிறது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், கார்த்திகை மாதம், நான்காவது வார சோமவாரத்தையொட்டி இன்று மாலை, 6:00 மணிக்கு, லட்சதீப திரு விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி, மகாஅபிஷேகமும், 108 சங்காபிஷேகமும், ஆராதனையும் நடைபெற உள்ளது. உத்திரமேரூர் அடுத்த ஆனந்தவள்ளி அம்பாள் சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், இன்று மாலை, 4:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.