பதிவு செய்த நாள்
12
டிச
2017
12:12
ப.வேலூர்: நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை, சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி, நான்காவது சோம வார விரதத்தை முன்னிட்டு, ப.வேலூர் அருகே, நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. காலை, 9:00 மணி முதல், மதியம், 12:30 வரை நடந்த அபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.