திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். இதனையடுத்து கோயில் நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைகளுக்கு பிறகு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். 4 பேர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணி நடந்து வருகிறது. சம்பவத்தை தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டது . பரிகார பூஜைகளுக்கு பிறகு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூர் விரைந்துள்ளார்.