நகரி : திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவிலில் நாளை, 17ம் தேதி முதல் விடியற்காலையில் திருப்பாவை பாடல்கள் ஒலிக்கும். நாளை, 17ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை திருமலைக்கோவிலில் மூலவரான வெங்கடேசபெருமாள் சன்னிதியில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களை, கோவில் அர்ச்சகர்கள் ஐதிக முறைப்படி பாடுவார்கள். மார்கழி மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ள சுப்ரபாத சேவை ஜனவரி 15ம் தேதி முதல் மீண்டும் வழக்கப்படி நடைபெறும். திருமலையின் நான்கு மாடவீதியில் தினமும் அதிகாலை நேரத்தில், கோவில் அர்ச்சகர் குழுவினர் திருப்பாவை பாடலை பாராயணம் செய்தபடி ஊர்வலமாக செல்லும் வைபவம் நடைபெறும்.