திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான கடைகளில் சீல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2017 12:12
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான கடைகளில் நீண்டகாலமாக வாடகை தராமல் வியாபாரம் செய்து வந்ததால், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் அருகே கீழரதவீதியில் உள்ள வாடகை கட்டடங்கள் பொதுஏலத்தில் விடப்பட்டிருந்தது. சீனிவாசன் என்பவர் இரண்டு கடைகளுக்கான வாடகையை நீண்டகாலமாக தராமல் ஓட்டல் நடத்தி வந்தார்.
அறநிலையத்துறை செயல்அலுவலர் ரோஷினி, இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில் நேற்று இரண்டு ஓட்டல்களும் சீல் வைக்கப்பட்டன.