பதிவு செய்த நாள்
16
டிச
2017
01:12
காரைக்கால்: திருநள்ளார் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, பக்தர்கள் பாதுகாப்பு குறித்து டி.ஜி.பி., சுனில்குமார் கவுதம் ஆய்வு செய்தார்.
காரைக்கால் திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து டி.ஜி.பி., சுனில் குமார் கவுதம் நேற்று ஆய்வு செய்தார்.
மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ள இடங்கள், பக்தர் கள் தரிசனம் செய்யும் இடங்கள், நான்கு வீதி கள் மற்றும் நளன் குளம் ஆகிய இடங்களை பார்வை இட்டார்.
உடன் சீனியர் எஸ்.பி., சந்திரன், எஸ்.பி.,.க்கள் மாரிமுத்து, வம்சிதரரெட்டி, இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர்,பாலமுருகன், பால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் சென்றனார்.
டி.ஜி.பி.,சுனில்குமார் கூறுகையில், சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுக் காப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. புதுச்சேரியிலிருந்து 1,500 போலீ சார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுவர்.
மேலும் கோவிலை சுற்றி, நளன் குளம், நான்கு வீதிகள் உள்ளிட்ட இடங்களில் அதிநவீன கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் எவ்விதம் சிரமம் இன்றி தரிசனம் செய்யலாம் என்றார்.