பதிவு செய்த நாள்
16
டிச
2017
03:12
ஈரோடு: ஈரோடு, வ.உ.சி., பூங்கா, மகாவீர ஆஞ்சநேயர் கோவில் வார வழிபாட்டுக் குழு சார்பில், அனுமன் ஜெயந்தி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டு தோறும் லட்டு, ஆரஞ்ச் கயிறு, செந்தூரம் பிரசாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. இதற்காக, 60 ஆயிரம் பேருக்கு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்கும் பணி, கோட்டை பத்ரகாளியம்மன் கோவில் பின்புறமுள்ள செங்குந்தர் சமுதாய மண்டப த்தில், கடந்த மூன்று நாட்களாக நடக்கிறது.
இதுகுறித்து வார வழிபாட்டுக் குழு செயலாளர் குமார் கூறியதாவது: அனுமன் ஜெயந்தி விழா வை முன்னிட்டு, 60 ஆயிரம் பேருக்கு லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலைமாவு, 25 மூட்டை, சர்க்கரை, 16 மூட்டை, நெய், 200 கிலோ, முந்திரி, திராட்சை தலா, 40 கிலோ, 15 டின் ரீபைன்டு ஆயில் பயன்படுத்தப்படுகிறது.
பிரசாதத்துடன் வழங்கப்படும் ஆரஞ்சு நிற கயிறு, இந்த முறை திருப்பதியில் இருந்து வரவ ழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.