காரைக்குடி: காரைக்குடி தூய சகாய அன்னை ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை மறை மாவட்ட பிஷப் சூசை மாணிக்கம் கொடியேற்றி வைத்து, புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை திறந்து வைத்தார். அவர் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பாரதிரியார்கள் வின்சென்ட் அமல்ராஜ், ஜோசப் லாரன்ஸ், மறை மாவட்ட பாதிரியார்கள் பங்கற்றனர். குறுந்தகடு வெளியிடப்பட்டது.
ஆலயத்தை வடிவமைத்து கட்டிய இன்ஜினியர் சேவியர் அந்தோணி ராஜ்க்கு பாராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை பங்கு பேரவையினர், அனைத்து பணிக்குழுவினர் செய்திருந்தனர். நவநாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 5:30 மணிக்கு திருஜெபமாலையும், சகாய அன்னை யின் உருவப்பட பவனியும், திருப்பலியும் நடக்கிறது. வருகிற 17ம் தேதி மாலை திருப்பலி, நற்கருணை பவனி 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருவிழா திருப்பலி, தேர்பவனி, நற்க ருணை ஆசிர், 24ம் தேதி காலை 8:15 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.