பதிவு செய்த நாள்
18
டிச
2017
01:12
நடுநிலை தவறாத துலாம் ராசி அன்பர்களே!
சுக்கிரன் டிச.21ல் விருச்சிகத்தில் இருந்து தனுசுவிற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை செய்வார். 3-ம் இடத்தில் இருக்கும் சூரியனும் நன்மை செய்வார். புதன், ஜன. 4ல் விருச்சிகத்தில் இருந்து தனுசுவிற்கு சென்றாலும், அவரால் நன்மை தர இயலாது. ராசியில் இருக்கும் குரு ,செவ்வாய், ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கும் கேது, 10-ம் இடத்தில் இருக்கும் ராகு ஆகியோரும் உங்களுக்கு நன்மை செய்ய மாட்டார்கள். ஆனால், சனிபகவான் டிச.19ல் 3-ம் இடத்துக்கு மாறுகிறார். இது உன்னத நிலை. அதன்மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறலாம். அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார்.
சூரியனால் ஏற்பட்ட வீண் செலவுகள் மறையும். பொருளாதார வளம் கூடும். மதிப்பு, மரியாதை இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குருவின் பார்வையால் எந்த இடையூறுகளையும் முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரி க்கும். டிச.21க்கு பிறகு, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜன.10,11ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிச.21,22ல் உறவி னர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஜன. 5,6,7ல் அவர்களால் நன்மை நடக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சூரியனால் லாபம் கிடைக்கும். உங்கள் ஆற்றல் பெருகி சேமிப்பு அதிகரிக்கும். மாத முற்பகுதியில் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். தொழிலை வளப்படுத்தலாம். ஜன.4க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். டிச. 16,17, ஜன.8,9,12,13-ந் தேதிகளில் சில தடைகள் வரலாம். டிச.26,27ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்து பணியாற்ற வேண்டியிருக்கும். யாருடைய உதவியையும் நாடாமல், தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். அதிக முயற்சி எடுத்தால் தான் கோரிக்கைகள் நிறைவேறும். டிச.21க்கு பிறகு சுக்கிரனால் செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடை க்கும். ஜன.3,4ல் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஜன. 4க்கு பிறகு உத்தியோகம் பார்ப்பவர்கள் இடமாற்றம் காணலாம். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று புகழும், பாராட்டும் கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது.
மாணவர்கள் கடும் முயற்சி எடுத்து படிக்க வேண்டி இருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. விவசாயிகள் கடும் பணிப்பளுவை சந்திப்பர். சொத்து வாங்கும் திட்டம் தள்ளி போகும். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக அமையும்.
பெண்களுக்கு குருவின் பார்வைகள் சிறப்பாக இருப்பதால், தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெற்று மகிழ் வுடன் இருக்கலாம். சுக்கிரனால் உறவினர்கள் மத்தியில் பெருமையாக பேசப்படுவர். அவர்கள் தக்க சமயத்தில் உதவுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும். சுயதொழில் செய்து வரும்
பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். டிசம்பர்18,19,20,28,29ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
* நல்ல நாள்: டிச. 18,19,20,26,27,28,29
* ஜன. 3,4,5,6,7,10,11
* கவன நாள்: டிச.30,31 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்
* பரிகாரம்:
● விநாயகர் கோயிலுக்கு செல்லுங்கள்
● நாக தேவதையை வணங்கி வாருங்கள்.
● பசுவுக்கு உணவளியுங்கள்.