பதிவு செய்த நாள்
18
டிச
2017
05:12
தர்மபுரி: தர்மபுரி சத்ய சாய் சேவா சமிதி சார்பாக, ஷீரடி சாய்பாபாவின், 100ம் ஆண்டு ஆராதனை, சத்ய சாய்பாபாவின், 92வது பிறந்த நாள் விழா, தர்மபுரி சத்ய சாய் சமூக மையத்தின் பொன்விழா ஆகிய மும்பெரும் விழா, தர்மபுரி பாரதிபுரத்தில் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு கோபூஜையுடன் விழா துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு பார்வதி சமதே பரமேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை, 5:00 மணிக்கு, மஹன்யாச ஜபம், மூன்றாம் கால ருத்ர ஜபம், அபிஷேகம் நடந்தது.