கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் திருப்பாவை பாடல் பயிற்சி முகாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2017 05:12
கரூர்: திருப்பாவை பாடல் பயிற்சி முகாம், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நடந்தது. முகாமில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் ராஜராஜேஸ்வரி, கலைச்செல்வி, கோகிலா ஆகியோர், திருபாவை பாடல்களை பாடி, பயிற்சி, விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, புலவர் பார்த்தசாரதி திருப்பாவை வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்தினார். மாணவர்களுக்கு திருப்பாவை புத்தகம், பேனா வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.