ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல் பத்து உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2017 10:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல உற்சவ விழாக்கள் நடந்தாலும், வைகுண்ட ஏகாதசி விழாவே முதன்மையானதாக கருத்தப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த விழா 21 நாட்கள் நடைபெறுகிறது.
கோயிலில் சிறப்புக்குரிய பகல் பத்து விழா இன்று காலை தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளில், நீள்முடி, முத்துமாலை, புஜகீர்த்தி, நெல்லிக்காய் மாலை, ரத்தின அபய ஹஸ்தம் உள்ளிட்ட அலங்காரத்தில் நம் பெருமாள் மூலஸ்தானத்தில், இருந்து அர்ச்சுன மண்டபத்துக்கு ஆழ்வார்கள் புடைசூழ எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 29ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.