சனி பகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2017 11:12
காரைக்கால்: விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இன்று சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலையில் சனி பகவான் இடம் பெயர்ந்ததும் லட்சக்கனக்கானோர் இங்குள்ள நளன் குளத்தில் புனித நீராடினர்.
திருநள்ளாறில் பிரசித்த பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகாவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா மிகவும் பிரிசித்தி பெற்றது. இந்த ஆண்டு கண்ணி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார். இவ்விழா இன்று காலை சரியாக 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. முன்னதாக அதிகாலை4 மணி முதல் சனி பகவானுக்கு பால், நல்லலெண்ணை, பழங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடந்து வந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோஷம் முழங்க சனி பெயர்ச்சி நேரத்தில் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறு சனி பகவானை தரிசிக்க நேற்று இரவு முதல் பொதுமக்கள் வரத்துவங்கினர். அதிகாலை வரை கூட்டம் வந்து கொண்டிருந்தனர். இன்று காலை வரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சரியாக காலை 9:59 மணிக்கு தீபாரணை நடந்தது.
மார்கழி மாதத்தில் கடும் பனி நிலவி வரும் நிலையில் சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்று சனி பகாவானை தரிசிக்க வந்த பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகளோடு தரிசனத்திற்கு வந்தனர்.சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க வந்த பக்கதர்கள் முன்னதாக நள குளத்தில் நல்லெண்ணெய் தேர்த்து நீராடி தங்களது பழைய ஆடைகளை குளத்தில் விட்டு சென்றனர். நேற்று அதிகாலை முதலே சுமார் 2 லட்சம் பக்தர்கள் குளத்தில் நீராடியதால் அப்பகுதியே பக்தர்கள் வெள்ளத்தால் மூழ்கியது. திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுகுதிகளில் இருந்து நேற்று இரவு முதலே வாகனங்களில் வரத்துவங்கினர் இதனால் அப்பகுதியில் எல்லையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு நடத்தே சென்று சாமி தரிசனம் செய்தனர்.