தி.மலை: அமாவாசை தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் உள்ள கோபால விநாயகர், பெரியாயி அம்மன் மற்றும் அங்காள அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், நேற்று முன்தினம் இரவு அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.