கீழக்கரை : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம் செய்யப்பட்டு, 8 வகையான அஷ்டாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. சரணகோஷம் முழங்க காலை 6:30 மணிக்கு கொடிப்பட்டம் ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பூதபலியிடும் நிகழ்ச்சி நடந்தது. வரும் டிச., 27 அன்று பேட்டை துள்ளல், ஆராட்டு புறப்பாடு, பஸ்மக்குளத்தில் நீராடல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சுவாமி, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.