பதிவு செய்த நாள்
19
டிச
2017
03:12
உத்தமசோழபுரம்: சேலம் உத்தமசோழபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் கோவிலில், நேற்று அனுமன் ஜெயந்தியுடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா துவங்கியது. பெருமாளுக்கு எதிரில் உள்ள, சிறியதிருவடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி?ஷகம் செய்து, வெண்ணெய் காப்பில், உலர் பழங்களால் அலங்கரித்து, வெற்றிலை மற்றும் வடை மாலைகள் சார்த்தி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் துவக்கமாக, புற்றுமண் எடுத்து வந்து பாலிகை போடும், ’திருநெடுந்தாண்டகம்’ என்ற உற்சவம் நடந்தது. இன்று முதல் டிச.,28 வரை, ’பகல்பத்து’ உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் வரும், 29 அதிகாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டு, பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து, பக்தர்களுக்கு சேவை ஸாதிப்பார். அன்றிலிருந்து ஜனவரி, 7 வரை, ’ராப்பத்து’ உற்சவம் நடக்கும். ஜனவரி, 11ல், ’கூடாரவல்லி’ உற்சவத்தையொட்டி, ஆண்டாள் நாச்சியாருக்கும், அழகிரிநாதருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கவுள்ளது.