பதிவு செய்த நாள்
19
டிச
2017
03:12
ஓசூர்: கெலமங்கலத்தில், சித்தலிங்கேஸ்வரா சுவாமி, ஐயப்ப சுவாமி ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலத்தில், ஐயப்பா சுவாமி பக்த மண்டலி சார்பில், ஒன்பதாம் ஆண்டு சித்தலிங்கேஸ்வர சுவாமி மற்றும் ஐயப்ப சுவாமி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அன்று அதிகாலை, 5:30 மணிக்கு மகா கணபதி, ஐயப்ப சுவாமி மற்றும் நவக்கிரக புரசர சமேத கலச ஆராதனை ஹோமங்கள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு, 51 மங்கள வாத்தியங்களுடன் சித்தலிங்கேஸ்வர சுவாமி மற்றும் ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடந்தது. கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலம், ஆஞ்சநேயர் கோவில் தெரு, எம்.ஜி., ரோடு, பஜார் தெரு, தேன்கனிக்கோட்டை சாலை வழியாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது. மாலை, 6:00 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 8:00 மணிக்கு தீர்த்த பிரசாத வினியோகம் செய்யப்பட்டது.