திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 7:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு மகா அபிஷகம் நடந்தது. தொடர்ந்து நவகிரக பூஜை அனுக்ஞை விக்னேஷ்வரபூஜை புன்யாகவாசனம். நவக்கிரக சனீஸ்வர பகவானுக்கு கலசஸ்தாபனம் மூல காயத்திரி மந்திர ஹாமங்கள் சாந்தி பரிகார ஹாமங்கள் பூர்னாகுதி 9:45 மணிக்கு நவக்கிரகங்களுக்கு மகா அபிஷகம் 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.