பதிவு செய்த நாள்
20
டிச
2017
01:12
விழுப்புரம் : கல்பட்டு யோக சனீஸ்வரர் கோவிலில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் அடுத்த கல்பட்டில், 21 அடி உயரமுள்ள, ஸ்ரீயோக சனீஸ்வரர் கோவிலில், நேற்று காலை 10:00 மணியளவில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு, சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின், முற்பகல் 11:00 மணியளவில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினசம் செய்தனர். முன்னதாக எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சின்னசேலம்சின்னசேலம் பகுதிகளில் சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது.சின்னசேலம் விஜயபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கோவில்களில் சனி பகவா னுக்கு, நேற்று சிறப்பு ஹோமங்கள், மகா தீபாராதனை நடந்தது.இதேபோல் கன்னிகாபரமேஸ்வரி, சிவன்கோவில், ஆக்கிய விநாயகர், திரவுபதி அம்மன், செல்வமுருகன், வாணிக பிள்ளையார் கோவில் மற்றும் கூகையூர், பொன்பரப்பி, உலகியநல்லுார் அர்த்தநரீஸ்வரர் ஆகிய கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தது.