பதிவு செய்த நாள்
21
டிச
2017
12:12
உடுமலை : உடுமலை, நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல்பத்து உற்சவம் துவங்கியது.பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. வரும், டிச., 29ம் தேதி, இந்நிகழ்ச்சி நடக்கிறது. உடுமலை, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், டிச., 29ம் தேதி காலை, 5:00 மணிக்கு, பரமபத வாசல் திறக்கப்படுகிறது. இந்நிகழ்வையொட்டி, நேற்றுமுன்தினம், 19ம் தேதி முதல், 28ம் தேதி வரை, பகல்பத்து உற்சவம் நடக்கிறது. இதில் ஒவ்வொரு நாளும், பூமிநீள நாயகி சமேத சீனிவாச பெருமாளுக்கு நாள்தோறும், சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது.உற்சவம் முடியும்வரை, நாள்தோறும், மாலை, 4:00 முதல் 6:00 மணி வரை, சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.