பதிவு செய்த நாள்
21
டிச
2017
12:12
திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், புஷ்பாஞ்சலி வழிபாடு நேற்று நடைபெற்றது; மணம் பரப்பும் மலர்களால், ஐயப்பனுக்கு அர்ச்சனை செய்து, பக்தர்கள் வழிபட்டனர். ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில், 58வது மண்டல பூஜை, காலேஜ் ரோடு ஐயப்பன் கோவில், கடந்த, 6ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. மகா கணபதி ஹோமம், நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம், பகவதி சேவை, உற்சவ பலி பூஜை, தாயம்பகை மேளம், பள்ளி வேட்டை, ஆறாட்டு விழா நடந்து வருகின்றன. விழாவையொட்டி, பல்வேறு கலைக்குழுவினரின், கலை நிகழ்ச்சிகளும், இன்னிசை நிகழ்ச்சி தினமும் மாலை, 6:30க்கு நடந்து வருகிறது. இவ்விழாவில் நேற்று, ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை சிறப்பாக நடைபெற்றது. மாலையில், சிறப்பு வழிபாடு, பஜனை நிறைவடைந்த பின், நம்பூதிரிகள் பல்வேறு வகையான பூக்களால் ஐயப்பனுக்கு அர்ச்சனை செய்து, வழிபாடு நடத்தினர். இதை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுவதும், மணம் பரப்பும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.