சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், பவானி ஆற்றங்கரையில், பிரசித்தி பெற்ற, ஐய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு லட்சார்ச்சனை மற்றும் ஸ்ரீசக்கர பூஜை, மூன்று தினங்களாக நடந்தது. கேரளாவை சேர்ந்த சிவப்பிரசாத் சுவாமிகள் தலைமையில் பூஜை நடந்தது. உலக நன்மை, பக்தர்கள் அனைவரும் சகல ஐஸ்வர்யங்கள் பெற, இப்பூஜை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களுக்கு, ஐய்யப்பன் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. இதில், 1,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.