அனுப்பர்பாளையம் : பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த், செயல் அதிகாரி செல்வம் பெரியசாமி முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 8 லட்சத்து, 21 ஆயிரத்து, 395 ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், 91 கிராம் தங்கம், 15.4 கிராம் வெள்ளி செலுத்தப்பட்டிருந்தது.