பதிவு செய்த நாள்
23
டிச
2017
12:12
கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஐயப்பன் கோவிலில், பிரம்ம காயத்ரி விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. ஐயப்பா சேவா சங்கம் சார்பில், இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் படி, 31ம் ஆண்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதில், 1,008 பிரம்ம காயத்ரி சிலைகளை வைத்து, மஹா சங்கல்பம், காயத்ரி ஹோமம் நடந்தது. ஐயப்பனுக்கு பால், பன்னீர், நெய், விபூதி, உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பிரம்ம காயத்ரி ஹோமத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். வரும், 25வரை பிரம்ம காயத்ரி ஹோமம் நடக்கும் என, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.