பதிவு செய்த நாள்
23
டிச
2017
12:12
பல்லடம்: ஆசைகளுக்கு நாம் எளிதில் அடிமையாகி விடுகிறோம்," என, மார்கழி உற்சவ விழாவில், கருத்து தெரிவிக்கப்பட்டது.சத்யசாய் சேவா சமிதி, மற்றும் பல்லடம் ஆன்மிக பேரவை இணைந்து, மார்கழி உற்சவ விழா, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் நடந்து வருகிறது.இரண்டாம் நாள் விழாவில், சத்ய சாய் தத்துவம் எனும் தலைப்பில், சாய் பக்தர் ஷேசராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:பிரபஞ்ச ரகசியங்களை கிரகிக்கும் தன்மையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் அறிந்தவரே ஸ்ரீ சத்யசாய். இறை தன்மையை நிரூபிக்கவே அவர், பூமியில் அவதாரம் எடுத்தார். தான் யார் என்பதை இவ்வுலகுக்கு காட்ட அவர் பட்டகஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
ஒரு அரசால் செய்ய முடியாத காரியங்களை சாய் செய்துள்ளார். கல்வி, மருத்துவத்தில் அவர் செய்த சேவை, இன்றும் நினைவு கூறப்படுகின்றன. மனிதர்களாகிய நாம் ஆசைகளுக்கு எளிதில் அடிமைப்பட்டு விடுகிறோம். தேவையற்றதை மனதில் சேமித்து வைத்து, நம்மை நாமே பாழ்படுத்தி கொள்கிறோம். இறைவன் நீக்கமற நிறைந்தவன் என்பதை உணர்ந்து, அவ்வழியில் செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர்பேசினார். முன்னதாக சத்யசாய் குழுவின் சார்பில், சாய் பஜனை நடைபெற்றது. இன்று மாலை, 6.30க்கு, கடவுள் எங்கே இருக்கிறார் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறவுள்ளது.