பதிவு செய்த நாள்
25
டிச
2017
11:12
பழநி : ஞாயிறு விடுமுறைதினத்தில், பழநி முருகன்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் நான்கு மணிநேரம்வரை காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். சபரிமலை சீசன், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை, ஞாயிறு பொதுவிடுமுறை போன்ற காரணங்களால் பழநி மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணி முதல் குவிந்த பக்தர்கள் ’ரோப்கார்’, வின்ச் ஸ்டேசனில் 2 மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர்.
மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் நான்குமணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதேப்போல தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் கடைகள் அகற்றப்பட்டுள்ளது. அங்கிருந்த கடைகள் அய்யம்புள்ளி ரோடு, பூங்காரோடு, இடும்பன்கோயில் சுற்றுலாவாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு செல்லும் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள், தரைக்கடைகள் வைத்துள்ளனர். இதனால் அடிவார குளத்துரோடு, பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடுகளில் நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள், பக்தர்களும் பாதிக்கப் படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.