* மற்றவன் குணம் எப்படி இருக்கிறது என்று ஆராய்வதை விட உன் குணம் எப்படி இருக்கிறது என்று பார். அதுவே உயர்ந்த பண்பு. * தேங்காய் உடைத்ததும் வெண்மையான பருப்பு தெரியும். மனதை சுத்தமாக வைத்துக் கொள் என்பதே தேங்காய் உடைப்பதின் தத்துவம். * குளிக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்; தண்ணீருக்கல்ல. அது போல் கடவுளை நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்; கடவுளுக்கல்ல. * எந்த வேளையும் கடவுளை நினைக்க வேண்டும். காலையில் எழும்போது, உணவு உண்ணும் போது, இரவு தூங்கும்போதாவது அவசியம் நினைக்க வேண்டும். * ஒரு விதை பலவாக பெருகுவது போல, நல்வினையோ, தீவினையோ நம்மிடம் ஒன்றுக்கு பலவாக வந்து சேரும். அதனால் நாம் செய்யும் செயல்கள் தூயனவாக அமைவது நல்லது. * நாம் கடவுளின் சன்னதியில் (உலகம்) தான் வாழ்கிறோம். அதனால், நல்ல சிந்தனை, சொல், செயல் என்று நம்மை இறைவனோடு மட்டுமே தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். * கடவுள் கண்ணுக்கு தெரியவில்லை. அதனால் கடவுள் இல்லை என்று கூறினால்; உயிரும் கண்ணுக்கு தெரியவில்லை. அதனால் உயிர், உடலில் இல்லை என்று ஆகிவிடுமா? விளக்குகிறார் வாரியார்