கருப்பூர் சோமநாத ஸ்வாமி ஐயனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2011 11:12
கும்பகோணம்: கொரநாட்டு கருப்பூர் சோமநாத சுவாமி ஐயனார் கோவிலில் 50 ஆண்டுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பகோணம் சென்னை சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில் 50 ஆண்டுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன் பிறகு, தற்போது பழமையாக இருந்த கோவிலை பக்தர்கள், உபயதாரர்கள் மூலம் பல லட்ச ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்து புனரமைத்துள்ளனர். கடந்த 12ம் தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி போன்ற பூர்வாங்க பூஜைகளை செய்து யாகசாலை ஹோமங்களை தொடங்கினர். இதையடுத்து நேற்றுமுன்தினம் வரை 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. மகா பூர்ணாகுதி தீபாராதனை செய்யப்பட்டு கடங்கள் விமானத்தை சென்றடைந்தது. அங்கு காலை 10.15 மணியளவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு ஐயப்ப தர்ம சேவா சங்கத்தினர் அன்னதானம் வழங்கினர்.